மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் , அதனுடைய மதிப்பை நம்மில் பெரும்பாலோர் நினைத்துகூட பார்ப்பதில்லை !.
சிந்திக்கின்ற திறன் படைத்த ,சிந்தனைகளை செயல்காளக்கி வியக்க வைக்கும் இந்த மனித பிறப்பின் உயர்ந்த நோக்கத்தை நம்மில் பலரும் மறந்து வெற்று ஜடமாய் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறோம் !
தாயின் கர்பத்தில் பத்து மாதம் உள் தங்கி உயிர் தாங்குகின்ற அற்புதம் தான் என்ன!,இது தாய், இதுதந்தை, இது அக்கா ,இது தம்பி, அண்ணன் ,மாமன் என உறவுகள் கொண்டாடி ,பாசம் எது நேஅசம் எது உணரக்கூடிய உயிர் கூட்டம் வேறு ஒன்றும் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதாக நாம் இதுவரை அறிய பெறவில்லை .
கண்மூடி அமர்ந்து தன்னை தான் உணர்ந்த சுகத்தை பட்டியளிடோர் பலர்,
மனித வாழ்க்கையில் வறுமை என்றும் , வலி என்றும் தடைகளை தாண்டி சிகரங்களை தொட்டவர்கள் பலர்!.
தன்னுடைய அற்புத அறிவாற்றலை பயன் படுத்தி இந்த மானிட சமுதாயம் பயனுற பல அறிய கண்டுபிடுப்புகளை கண்டு அளித்தோர் பலர் !
மக்களின் உள்ள உணர்ச்சிகளை தட்டி எழுப்பி அவர்களின் மட்டற்ற சக்தியை வெளி கொண்டு வந்த கவிஞ்சர் பெருமக்கள் பலர்!
அற்புதமான இந்த மானிட பிறவியின் இன்றைய நிலை என்ன ?..
கோரமான தீவிரவாத தாக்குதல்கள், மிக கேவலமான இழிசெயல்கள்,பாசம் நேசம் என மறந்து மனிதன் மரமாக வாழுகின்ற அவலம்..
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மனித நேய உயர் எடுத்து காட்டுக்கள் ! செல்வன் யிதேந்திரனின் இதய தானம் .இறந்தும் உயிர் வாழுகின்ற உன்னதம் என கொஞ்சம் அறுதல் கொண்டாலும்..சிந்திக்க வேண்டிய தருணமிது !!
நம்மை நாம் உணர்வோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக